search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அதிபர் ஜோ பைடன்
    X
    அதிபர் ஜோ பைடன்

    உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்பியுள்ளோம் - அதிபர் ஜோ பைடன்

    உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மனிதாபிமான உதவியை அமெரிக்கா வழங்கும் என அதிபர் பைடன் தெரிவித்திருந்தார்.
    வாஷிங்டன்:

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 20 நாட்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் அதிபர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. 

    மறுபுறம் ரஷியாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. 

    இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ஆக்கிரமிப்பு ரஷிய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

    இந்நிலையில், உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்பியுள்ளோம் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    Next Story
    ×