search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    போரை நிறுத்துமாறு புதினிடம் வலியுறுத்துங்கள்- பிரதமர் மோடிக்கு உக்ரைன் வெளியுறவு மந்திரி வேண்டுகோள்

    இந்தியாவின் நலனுக்காகவும், இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்காகவும் போரை நிறுத்துமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றுடன் 11 நாள் ஆகிறது. ரஷியாவின் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் நிலை குலைந்து போய் இருக்கிறது.

    பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளது. ஆனாலும் உக்ரைன் தொடர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவின் நலனுக்காகவும், இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்காகவும் போரை நிறுத்துமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா கூறியதாவது:-

    ரஷிய படைகள் மனிதாபிமான மற்ற நிலையில் செயல்படுகிறது. ஒப்பந்தத்தை மீறியுள்ளது. வெளி நாட்டு மாணவர்கள் உள்பட பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் துப்பாக்கி சூட்டை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    30 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து மாணவர்களின் வரவேற்பு இல்லமாக உக்ரைன் இருந்தது. வெளிநாட்டு மாணவர்களை பணய கைதிகளாக வைத்திருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம்சாட்டி இந்த நாடுகளின் அனுதாபத்தை பெற ரஷியா முயற்சிக்கிறது.

    இந்தியாவின் நலனுக்காகவும், இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்காகவும் பிரதமர் நரேந்திரமோடி ரஷிய அதிபரிடம் பேசி போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    போர் நிறுத்தம் முடிவு அனைத்து நாடுகளுக்கும் நல்லதாகவே முடியும். உக்ரைனின் விவசாய பொருட்களின் மிகப்பெரிய நுகர்வோராக இந்தியா உள்ளது. இந்த போர் நீடித்தால் புதிய அறுவடைகளை விதைப்பது எங்களுக்கு கடினமாக இருக்கும்.

    எனவே உலகளவிலும் மற்றும் இந்திய பாதுகாப்பு அடிப்படையிலும் கூட இந்த போரை நிறுத்துவதே நல்லது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும். இந்தியாவின் சாதாரண குடிமக்கள் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... போர் நிறுத்த தோல்விக்கு உக்ரைனே காரணம்- ரஷிய படைகள் ஆக்ரோ‌ஷமாக குண்டுவீச்சு

    Next Story
    ×