search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    22 செயற்கைகோளுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய சீனா
    X
    22 செயற்கைகோளுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய சீனா

    22 செயற்கைகோளுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய சீனா

    ஒரே ராக்கெட் மூலம் அதிக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய சாதனையை தற்போது சீனா படைத்துள்ளது.
    பெய்ஜிங்:

    சீனா பல்வேறு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய லாங்மார்ச் 8 வகை நவீன ராக்கெட்டை இன்று சீனா விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

    தெற்கு ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி மையத்தில் இருந்து 22 செயற்கைகோளுடன் இந்த ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

    இதை பார்த்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    வணிக சேவைகள், கடல் சுற்றுசூழல் கண்காணிப்பு, காட்டுத்தீ தடுப்பு ஆகிய பணிகளை இந்த செயற்கைகோள் கண்காணித்து தகவல்கள் அனுப்புவது மற்றும் விண்ணில் இருந்து புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ளும்.

    ஒரே ராக்கெட் மூலம் அதிக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய சாதனையை தற்போது சீனா படைத்துள்ளது.

    Next Story
    ×