search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
    X
    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

    போர் பீதியை உருவாக்க வேண்டாம் - மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

    உக்ரைனில் இருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடும்பங்களை அந்நாட்டு தூதரகங்கள் திரும்ப அழைத்துள்ளது தவறான முடிவு என்று அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    கெய்வ்:

    உக்ரைனின் எல்லைகளைச் சுற்றி ஒரு லட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், போர் மூளுவதை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் போர் பீதியை உருவாக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் போரின் விளிம்பில் உள்ளது என்ற தவறான கருத்து என்றும் உக்ரைனில் இருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடும்பங்களை திரும்பப் பெறுவதற்கான முடிவுகளை அந்நாட்டு தூதரக ஊழியர்கள் எடுத்திருக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    போர் அச்சம் காரணமாக உக்ரைன் பொருளாதாரம் நிதித்துறை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத வன்முறை மற்றும் 2014 இல் கிரிமியாவை ஆக்ரமித்த ரஷ்யாவினால் ஏற்பட்டுள்ள சைபர் தாக்குதல் உள்ளிட்ட பாதிப்பு சூழலில் நாங்கள் எட்டு ஆண்டுகளாக இருந்து வருகிறோம் என்றும் என்றும் அவர் கூறினார். 

    Next Story
    ×