search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
    X
    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

    கொரோனா பாதிப்பை உணர்ந்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட கனடா பிரதமர்

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், இம்மாத தொடக்கத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
    டொரண்டோ:

    கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார்.

    இதுதொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேற்று எனது கொரோனா தொற்று பரிசோதனை முடிவு வந்தது. அதில் எனக்கு தொற்று இல்லையென தெரிந்தது. எனது ரேபிட் கிட் சோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஆகவே சுகாதாரத் துறையின் விதிகளைப் பின்பற்றி 5 நாட்களுக்கு என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன். நான் தற்போது ஆரோக்கியமான உடல்நிலையுடன் உள்ளேன். அதனால் வீட்டிலிருந்து பணிபுரிய உள்ளேன் என பதிவிட்டுள்ளார்

    Next Story
    ×