search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குறைந்து வரும் கொரோனா பரவல்- கட்டுப்பாடுகளை நீக்கும் இங்கிலாந்து

    கொரோனா தொற்று இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையும் அதிகரித்தது.

    இதை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப் படுத்தப்பட்டது. 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    இதையடுத்து இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் பொது மக்கள் கட்டுப்பாடுகளை சரிவர கடைப்பிடித்ததால் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. இதனால் அடுத்த வாரம் முதல் கட் டுப்பாடுகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்கள் முக கவசம் அணியாமல் வேலைக்கு செல்லலாம். இனி வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அவசிய மில்லை. இரவு விடுதிகள், பார்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன.

    கொரோனா தொற்று இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பள்ளி குழந்தைகள் நீண்ட நேரம் முக கவசம் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை.

    கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்க அரசு வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் கொரோனாவை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒமைக்ரான் அலை வேகமாக பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள சூழ்நிலையில் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கிறது.

    Next Story
    ×