search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் எனக்கு போட்டியாக இருப்பார்- ஜோ பைடன் கருத்து

    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் எனக்கு போட்டியாக இருப்பார் என்று அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் பதவி வகித்து வருகிறார். இவர் சமீப காலமாக ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் பரவின.

    கடந்த மாதம் இவர் அளித்த பேட்டியில் 2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவாரா? என்று கேட்டதற்கு, நான் அதைப் பற்றி நினைக்கவில்லை. நாங்களும் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் நிருபர்கள் அதிபர் தேர்தலில் உங்களுக்கு போட்டியாக கமலா ஹாரீஸ் வருவாரா? என கேட்டனர். அதுபற்றி ஜோபைடன் கூறும்போது, கமலா ஹாரீஸ் தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார் என நினைக்கிறேன்.

    அதிபர் தேர்தலில் எனக்கு அவர் போட்டியாக இருப்பார் என நினைக்கிறேன். ஆனால் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

    Next Story
    ×