search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தலிபான் ராணுவத்தில் தற்கொலை படை பிரிவு இணைப்பு
    X
    தலிபான் ராணுவத்தில் தற்கொலை படை பிரிவு இணைப்பு

    ஆப்கானிஸ்தானின் தலிபான் ராணுவத்தில், தற்கொலை படைப்பிரிவு

    சிறப்பு செயல்பாடுகளுக்கு தற்கொலை படையினர் பயன்படுத்தப்படுவர் என, ஆப்கான் தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வாபஸ் பெற்றதை அடுத்து கடந்த ஆக்ஸ்ட் ஆண்டு மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்நிலையில் இஸ்லாமிய எமிரேட் ஆப்கானிஸ்தான் அமைப்பு தங்களது ராணுவத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்களை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.  

    தலிபான்களின் சிறப்புப் படையாக தற்கொலைபடைப் பிரிவு இருக்கும் என்றும்,  ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அது செயல்படும் என்றும் அந்நாட்டு தகவல் மற்றும் கலாச்சாரத் துறை துணை அமைச்சரும், தலிபான்களின் செய்தித் தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

    சிறப்பு நடவடிக்கைகளுக்கு இந்த தற்கொலை படை பிரிவு பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலிபான் இராணுவத்தில் தேவையின் அடிப்படையில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள், மேலும் முந்தைய ஆப்கான் ராணுவச் சேர்ந்த நிபுணர்களுக்கும் எதிர்கால ராணுவத்தில் பணி வழங்கப்படும் என்றும்  ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் முன்னாள் ராணுவத்திற்கு எதிரான போரில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களின் மிக பெரிய வெற்றிக்கு தற்கொலை படை தாக்குதல் பிரிவின் உத்திகளே காரணம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×