search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒமைக்ரான் அச்சம்: இரண்டு ஆயு்வுகளில் குட் நியூஸ்

    ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஆபத்து குறைவு என ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் முன்னதாகவே நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மிகப்பெரிய அளவில் தாக்கம் இல்லை.

    ஆனால், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைய ஆரம்பித்தது. இது உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதில் டெல்டா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் டெல்டா வைரசால் 2-வது அலை உருவாகி அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.

    டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக தேவைப்பட்டது. இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி, சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    பின்னர் டெல்டா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட 2-வது அலையை இந்தியா கட்டுப்படுத்தியது. தற்போது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவை விட மிகத்தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசிகளின் திறனை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தற்போது அதிகமாக பரவி வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் வருவதால் மிகப்பெரிய அலை உருவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்தியாவில் 3-வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனால், ஒமைக்ரான் குறித்து இன்னும் இறுதி முடிவுக்கு விஞ்ஞானிகள் வரவில்லை.

    இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து வரும் இரண்டு பத்திரிகைகளில் ஆய்வு கட்டுரைகள் வெளியாகியுள்ளது. அதில் டெல்டா போன்று ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவு என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    இருந்தாலும், லேசான விளைவுகளை வைத்து நாம் மேற்கொண்ட ஆய்வு, அதிகமாக பாதிக்கப்படும்போது இந்த முடிவு கிடைக்காமல் போகலாம்.

    முதற்கட்ட ஆய்வுதான். புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்கவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக ஒமைக்கரான் பாதிப்பால் நோயாளிகள் மருத்துவமனைகளை அதிக அளவில் நாடும் நிலை ஏற்படாது என தற்போதைய நிலையில் நம்பலாம்.

    Next Story
    ×