search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மீட்புக்குழு
    X
    மீட்புக்குழு

    இந்தோனேசியா எரிமலை வெடிப்பு - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

    எரிமலை வெடிப்பை அடுத்து அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தால் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை சில தினங்களுக்கு முன் கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்துள்ளது.

    எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். அதிகரிக்கும் வெப்ப காற்றால் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
     
    இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. படுகாயம் அடைந்த 100க்கும் அதிகமானோரை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில், எரிமலை வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். 

    Next Story
    ×