search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா-பாகிஸ்தான் எல்லை
    X
    இந்தியா-பாகிஸ்தான் எல்லை

    ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை, மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பலாம்- பாக். அனுமதி

    மனிதாபிமான உதவியை அனுப்புவதற்கு பாகிஸ்தான் அரசு எந்த நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்றும் இந்திய அரசு தெரிவித்தது.
    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்தியா 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக அனுப்ப உள்ளதாக அறிவித்தது. மேலும், இந்த பொருட்களை வாகா எல்லையை கடந்து பாகிஸ்தான் வழியாக அனுப்ப அனுமதிக்கும்படி பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இதனை ஏற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், போக்குவரத்து நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான முறையில் இந்தியா 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்ப அனுமதி அளிக்கப்படும், என்றார்.

    மனிதாபிமான நோக்கங்களுக்காக விதிவிலக்கான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை எடுத்துச் செல்ல அனுமதிப்பதாக, பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் முறையாக இந்தியாவிடம் தெரிவித்தது. 

    ஆனால், போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சரக்குகள் வாகா எல்லையில் இருந்து பாகிஸ்தான் லாரிகளில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று  வலியுறுத்தியது. இந்தியாவோ தனது சொந்த வாகனங்களில் ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை அனுப்ப விரும்பியது. இதில் இழுபறி நீடித்ததால், இந்தியாவின் கோதுமை அனுப்பும் திட்டத்தை பாகிஸ்தான் நேற்று திடீரென நிராகரித்தது. அதன்பின்னர் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. மனிதாபிமான உதவியை அனுப்புவதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்றும் இந்திய அரசு தெரிவித்தது. 

    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்ப பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது. மேலும், வாகா எல்லை வழியாக இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை எடுத்துச் செல்லும் பாகிஸ்தானின் முடிவை மேலும் எளிதாக்கும் நோக்கில், ஆப்கானிஸ்தான் லாரிகளை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு அனுமதிக்கலாம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வாகா எல்லையிலிருந்து டோர்காம் வரை ஆப்கானிஸ்தான் லாரிகளில் பொருட்கள் ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும்.
    Next Story
    ×