search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமன் ராணுவம்
    X
    ஏமன் ராணுவம்

    ஏமனின் மரிப் நகரை கைப்பற்ற கடும் சண்டை- 38 கிளர்ச்சியாளர்களை சுட்டுக்கொன்றது ராணுவம்

    மரிப் நகரை கைப்பற்றுவது தொடர்பாக ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
    சனா:

    ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஏமனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மரிப் மற்றும் ஷப்வா மாகாணங்களில் பல மாவட்டங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனால் அந்த நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
     
    இந்நிலையில், மரிப் நகரின் வடமேற்கு பகுதியில் இன்று நடந்த சண்டையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 38 பேரை ஏமன் ராணுவம் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கிளர்ச்சியாளர்களின் 9 வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×