search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து ராணி எலிசபெத்
    X
    இங்கிலாந்து ராணி எலிசபெத்

    சிறந்த முதியவருக்கான விருதை மறுத்த இங்கிலாந்து ராணி

    மறைந்த இங்கிலாந்து இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 2011-ம் ஆண்டு தனது 90 வயதில் ஆண்டின் சிறந்த முதியவர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
    லண்டன்:

    இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பத்திரிகை ஒன்று பொது வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் முதியவர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ‘ஓல்டி ஆப் தி இயர்’ (ஆண்டின் சிறந்த முதியவர்) என்கிற விருதை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த முதியவர் விருதை 95 வயதான இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு வழங்க அந்த பத்திரிகை நிறுவனம் முடிவு செய்தது.

    ஆனால் ராணி 2-ம் எலிசபெத் அந்த விருதை பெற மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர் அந்த பத்திரிகைக்கு எழுதிய கடிதத்தில் ‘‘முதுமை என்பது நீங்கள் உணர்வதில்தான் உள்ளது. அதாவது முதுமை என்பது மனதில்தான் உடலில் அல்ல. நான் என்னை முதுமையாக உணரவில்லை. எனவே நான் இந்த விருதுக்கு தகுதியானவர் அல்ல. தகுதியான நபரை கண்டுபிடித்து அந்த விருதை வழங்குவீர்கள் என நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

    ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்

    மறைந்த இங்கிலாந்து இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 2011-ம் ஆண்டு தனது 90 வயதில் ஆண்டின் சிறந்த முதியவர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே ராணி 2-ம் எலிசபெத்தின் டாக்டர்கள் அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதை தொடர்ந்து, அவர் தனது நெதர்லாந்து பயணத்தை ரத்து செய்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.


    Next Story
    ×