என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு- அமெரிக்க ஆய்வு முடிவு
Byமாலை மலர்20 Oct 2021 1:19 AM GMT (Updated: 20 Oct 2021 1:19 AM GMT)
கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதை தற்போது ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர் பாப்லோ பெனாலோஸாமெக்மாஸ்டர் கூறி உள்ளார்.
வாஷிங்டன்:
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பற்றி அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘ஜர்னல் ஆப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேசன்’ என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.இந்த ஆய்வில், கொரோனா வைரசுக்கு எதிரான கோவிட்-19 தடுப்பூசிகள், அதே போன்ற பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும் என தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ்கள் என்னும்போது, அது சார்பெகோ வைரஸ் அடங்கிய சார்ஸ் கோவ்-1, சார்ஸ், சார்ஸ் கோவ்-2 ஆகிய 3 வைரஸ்களை குறிக்கிறது.
கோவிட்-19 தடுப்பூசி தற்போது கோவிட் -19 தொற்றை உருவாக்குகிற சார்ஸ்கோவ்-2 வைரசுடன் பிற வைரஸ்களையும் தடுக்கிறதாம். மேலும் சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற எச்கோவ்-ஆக்43 மற்றும் எச்கேயு-1 வைரஸ்களில் இருந்தும் கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறதாம். இந்த வைரஸ்களுக்கு எதிராக கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதை தற்போது ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர் பாப்லோ பெனாலோஸாமெக்மாஸ்டர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... செயல்படாத வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபகரிக்க முயன்ற 12 பேர் கைது
Next Story
×