என் மலர்

  செய்திகள்

  நிரவ்மோடி
  X
  நிரவ்மோடி

  அமெரிக்க கோர்ட்டில் நிரவ்மோடி மனு தள்ளுபடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நஷ்ட ஈடு கோரி நிரவ்மோடி தாக்கல் செய்த மனுவை அமெரிக்க நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
  வாஷிங்டன்:

  வைர வியாபாரியான நிரவ்மோடி அவரது உறவினர் மெகுல்சோக்சி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர். நிரவ்மோடி அமெரிக்காவில் 3 நகை வர்த்தக நிறுவனங்களை வேறு ஆட்கள் மூலம் நடத்தி வந்தார். இதன் அறங்காவலராக அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் லெவின் நியமிக்கப்பட்டு இருந்தார்.

  இந்த நிலையில் 3 நிறுவனங்கள் மூலம் மோசடி நடந்து இருப்பதாகவும், இதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.110 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நிரவ்மோடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருடைய மனுவை அமெரிக்க கோர்ட்டு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
  Next Story
  ×