search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது

    உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,77,72,121 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பெறுபவர்களில் 80,653 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    ஜெனீவா:

    உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,99,06,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,72,45,735 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48 லட்சத்து 88 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா தொற்றுக்கு தற்போது 1,77,72,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80,653 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

    அமெரிக்கா

    பாதிப்பு

    4,55,46,217

    உயிரிழப்பு

    7,39,762

    குணமடைந்தோர்

    3,51,04,880

    இந்தியா

    பாதிப்பு

    3,40,19,680

    உயிரிழப்பு

    4,51,469

    குணமடைந்தோர்

    3,33,55,097

    பிரேசில்

    பாதிப்பு

    2,15,97,949

    உயிரிழப்பு

    6,01,643

    குணமடைந்தோர்

    2,07,40,267

    இங்கிலாந்து

    பாதிப்பு

    8,72,883

    உயிரிழப்பு

    1,38,080

    குணமடைந்தோர்

    67,65,629

    ரஷ்யா

    பாதிப்பு

    78,61,681

    உயிரிழப்பு

    2,19,329

    குணமடைந்தோர்

    69,16,086


    Next Story
    ×