search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரிமலை வெடிப்பு
    X
    எரிமலை வெடிப்பு

    ஸ்பெயினில் தொடர்ந்து வெடித்து சிதறும் எரிமலை- ஆறுபோல் வழிந்தோடும் லாவா குழம்பு

    எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
    லா பல்லா:

    ஸ்பெயினின் லா பல்மா தீவில் சீற்றத்துடன் காணப்பட்ட கும்ரே வீஜா எரிமலை, கடந்த மாதம் 19ம் தேதி வெடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து சீற்றத்துடன் லாவா குழம்பை கக்கி வருகிறது. எரிமலையிலிருந்து வெளிப்படும் லாவா குழம்பு, மலை முகட்டில் ஆறுபோல் வழிந்தோடி வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள 4 கிராமங்களில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்களும், சுற்றியுள்ள நிலங்களும் அழிந்துவிட்டன.

    லாவா குழம்பு சீற்றத்துடன் வெளியேறுவதை அப்பகுதி மக்கள் அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். எரிமலை வெடிப்பால் அப்பகுதியில் வசித்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

    இதற்கிடையே எரிமலை சீற்றத்தால் வானில் படர்ந்த சாம்பல் சற்று குறைந்ததையடுத்து, லா பல்மா தீவில் உள்ள விமான நிலையம் திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கேனரி தீவுகளின் மற்ற விமான நிலையங்களும் திறக்கப்பட்டன.
    Next Story
    ×