search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா எச்சரிக்கை
    X
    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா எச்சரிக்கை

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா எச்சரிக்கை

    வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செயல்பட வேண்டும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
    பியாங்யாங் :

    ஆறு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ள வடகொரியா ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

    இந்த சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அந்த கூட்டத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் கவுன்சிலின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தது.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான ஜோ சோல் சூ கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இதேபோன்ற ஆயுத சோதனைகளில் சமமாக பிரச்சினை எடுக்காததால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரட்டை கையாளும் தரநிலை கொண்டது என்பது தெரிகிறது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செயல்பட வேண்டும்’’ என கூறினார்.
    Next Story
    ×