search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காபூல் விமான நிலையம்
    X
    காபூல் விமான நிலையம்

    ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 30-ம் தேதி முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சர்வதேச விமானங்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தயாராக இருப்பதாக தலிபான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. 

    தற்போது காபூல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி  செய்யப்பட்டதாகவும், முன்பு போல அனைத்து விமானங்களையும் இயக்க  விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் தலிபான் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
    Next Story
    ×