search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் மோடி
    X
    ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் மோடி

    கனடா தேர்தலில் வெற்றி- ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மோடி வாழ்த்து

    இந்தியா-கனடா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    கனடா பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ  மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ளார். 

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இந்தியா-கனடா உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய மற்றும் பலதரப்பு பிரச்சினைகளில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன், என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
    Next Story
    ×