என் மலர்

  செய்திகள்

  கிம் ஜாங், டிரம்ப்
  X
  கிம் ஜாங், டிரம்ப்

  வடகொரிய அதிபர் கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டிய டிரம்ப்- வெளியான அதிர்ச்சி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரு கட்டத்தில் டிரம்ப், கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவும் சுமுக உறவு ஏற்படும் எனத் தோன்றியது.
  அமெரிக்கா:

  அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் பொது இடங்களில் நட்பு பாராட்டி வந்தார். அப்படி இருப்பினும் டிரம்ப், கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

  டிரம்ப், அதிபராக இருந்தபோது வடகொரியாவில் நடந்து வந்த அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவதற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஒரு கட்டத்தில் டிரம்ப், கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவும் சுமுக உறவு ஏற்படும் எனத் தோன்றியது.

  ஆனால், இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் சுமுக போக்கு இல்லை. இந்நிலையில் வெளிப்படையாக கிம்மை தன் நண்பன் என்று சொல்லி வந்தாலும், அவரை சர்ச்சைக்குரிய வகையில் டிரம்ப் திட்டி தீர்த்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

  வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் பாப் உட்வார்டு மற்றும் ராபர்ட் கோஸ்டா ஆகியோர், டிரம்ப் - கிம் சம்பந்தமான ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளனர்.

  அந்தப் புத்தகத்தில்தான், கிம் குறித்து டிரம்ப் தன் உயர் அதிகாரிகளோடு உரையாடுகையில், 'அவர் ஒரு பைத்தியக்காரன்' என்று சொல்லியிருப்பதாக தகவல்.

  Next Story
  ×