என் மலர்

  செய்திகள்

  துப்பாக்கி சூடு
  X
  துப்பாக்கி சூடு

  ரஷிய பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு- 8 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவரை போலீசார் சுட்டுப் பிடித்ததாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
  மாஸ்கோ:

  ரஷியாவின் பெர்ம் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மாணவர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். 

  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கி சூடு நடத்திய மாணவரை சுட்டு பிடித்துள்ளனர். பலத்த காயமடைந்த அந்த மாணவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  ரஷியாவில் இந்த ஆண்டு கல்வி நிலையங்களில்  நடந்த இரண்டாவது துப்பாக்கி சூடு இதுவாகும். பொதுவாக ரஷிய கல்வி நிறுவனங்களில் அதிக பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமாக துப்பாக்கிகளை வாங்குவதில் உள்ள சிரமம் காரணமாக, கல்வி நிலையங்களில் துப்பாக்கி சூடு நடப்பது அரிது. எனினும்,  வேட்டை துப்பாக்கிகளை பதிவு செய்ய முடியும் என்பதால் ஒரு சில இடங்களில் அசம்பாவிதம் நடக்கிறது. 
  Next Story
  ×