search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    சீனாவில் 100 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி

    உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது.

    பீஜிங்:

    கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. இது பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    சீனாவில் தோன்றினாலும் ஆரம்பத்திலேயே சீனா நோய் பரவலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த நிலையில் 3-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.

    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 140 கோடி மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதில் நேற்று முன்தினம் வரை 216 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள்.

     

    கொரோனா வைரஸ்

    100 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதாவது நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேருக்கும் முழுமையாக (2 முறை) தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

    உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது.

    இதையும் படியுங்கள்... மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெறவில்லை- செல்லூர் ராஜூ பேட்டி

    Next Story
    ×