search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகமது மசூத்
    X
    அகமது மசூத்

    வெளிநாட்டுக்கு தப்பி ஓடவில்லை... அகமது மசூத் இன்னும் பஞ்ச்சீரிலேயே இருக்கிறார்

    தலிபான்கள் பஞ்ச்சீர் பகுதிக்குள் நுழைந்ததும் அகமது மசூத், அமருல்லா சலே இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது.
    காபூல்:

    தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றி இருந்தாலும் அங்குள்ள பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் எதிர்ப்பு படையினர் கைவசம் இருந்தது. அதை கைப்பற்றுவதற்காக தலிபான்கள் தாக்குதல் நடத்தினார்கள். தற்போது பஞ்ச்சீர் மாகாணம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் இதனை எதிர்ப்பு படை மறுத்துள்ளது.

    பஞ்ச்சீர் மாகாணத்தில் செயல்படும் எதிர்ப்பு படைக்கு தேசிய எதிர்ப்பு கூட்டணி என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படையின் தலைவராக அகமது மசூத் செயல்பட்டு வருகிறார். ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை ஜனாதிபதி அமருல்லா சலேவும் இந்த படையில் இடம்பெற்று இருக்கிறார்.

    தலிபான்கள் பஞ்ச்சீர் பகுதிக்குள் நுழைந்ததும் அகமது மசூத், அமருல்லா சலே இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இருவரும் தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்று விட்டு அங்கிருந்து துருக்கிக்கு சென்று விட்டதாக தகவல் வெளியானது.

    தலிபான்கள்

    இதை தேசிய எதிர்ப்பு கூட்டணி மறுத்துள்ளது. இருவருமே பஞ்ச்சீர் பகுதியிலேயே தங்கி இருந்து எங்கள் படைகளை வழி நடத்தி வருகிறார்கள் என்று கூறினார்கள்.

    இதற்கிடையே அகமது மசூத்தின் நெருங்கிய கூட்டாளியான ஹசம் முகமது கூறும் போது, “எங்கள் தலைவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று விடவில்லை. அவர்கள் மக்களுடன்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.

    மேலும் அவர் கூறும்போது, “நெடுஞ்சாலைகள், நகரப்பகுதிகள் ஆகியவற்றை மட்டுமே தலிபான்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். மீதி உள்ள இடங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. போர் தந்திரத்தின் அடிப்படையில்தான் நாங்கள் பின்வாங்கி சென்று தலிபான்களுக்கு வழி விட் டோம். அவர்கள் சிங்கத்தின் குகையில் சிக்கி இருக்கிறார்கள்” என்று கூறினார்.


    Next Story
    ×