search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சல்மய் கலீல்சாத்
    X
    சல்மய் கலீல்சாத்

    கடந்த 3 நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து 250 வெளிநாட்டினர் வெளியேறினர்

    ஆப்கானிஸ்தானில் இருந்து 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வெளியேறி உள்ளனர் என்று வாஷிங்டனின் சிறப்பு தூதரும், தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவருமான சல்மய் கலீல்சாத் தெரிவித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் வெளியேற விரும்பும் மக்களை வெளியேற்றும் பணியை கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி வரை அமெரிக்க படைகள் செய்தனர். அதன் பின் அமெரிக்க ராணுவமும் முழுமையாக வெளியேறியது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள எஞ்சிய அமெரிக்க நாட்டவர்கள் உள்பட வெளிநாட்டினரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வெளியேறி உள்ளனர் என்று வாஷிங்டனின் சிறப்பு தூதரும், தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவருமான சல்மய் கலீல்சாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, ‘கத்தார் நாடு தனது விமான சேவையை ஆப்கானிஸ்தானில் தொடங்கி உள்ளது. இதில் தலிபான்களின் ஒத்துழைப்பு முக்கியமான முயற்சி ஆகும். அமெரிக்கர்கள், வெளிநாட்டினர், நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் ஆப்கான் மக்கள் ஆகியோரை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பான வழியை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்’ என்றார்.

    Next Story
    ×