search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடும் சண்டை- தலிபான்கள் 600 பேர் கொல்லப்பட்டனர்

    மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் அதை எதிர்ப்பு படையினர் திட்டவட்டமாக மறுத்தனர். தாங்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


    ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு அடிபணியாமல் சண்டையிட்டு வருகிறார்கள்.

    சில நாட்களுக்கு முன்பு அந்த மாகாணத்தை சுற்றி வளைத்த தலிபான்கள் தேசிய கிளர்ச்சி குழுவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    இதற்கிடையே அந்த மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் அதை எதிர்ப்பு படையினர் திட்டவட்டமாக மறுத்தனர். தாங்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே இந்த மோதலில் தலிபான்கள் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பஞ்ச்ஷிர் மாகாண போராளிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலிபான்கள் பிடிபட்டுள்ளனர். அல்லது சரண் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதையும் படியுங்கள்... ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் தாமதம்

    Next Story
    ×