search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான சேவை
    X
    விமான சேவை

    கொரோனா அச்சுறுத்தல் - இந்திய விமானங்களுக்கான தடையை நீடித்தது கனடா

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன.
    நட்டவா:

    கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
      
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி மிக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
    தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×