search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குந்தூஸ், சர்-இ போல் மாகாணங்களை கைப்பற்றி விட்டோம்: தலிபான்கள்

    அமெரிக்க ராணுவம் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி நாட்டின் பல இடங்களை பிடித்து வருகின்றன.
    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆதிக்கத்தை ஒடுக்கி ஜனநாயகத்தை நிலைநிறுத்த அமெரிக்க ராணுவம் உதவி செய்து வந்தது. அமெரிக்க ராணுவத்தின் உதவியால் தலிபான் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆப்கானிஸ்தானில் உருவானது.

    என்றாலும், தலிபான்கள் தங்களது தாக்குதலை நிறுத்தவில்லை. தலிபான் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் போலீசார், ராணுவ வீரர்கள், அப்பாவி பொது மக்கள் தினந்தோறும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன் அமெரிக்க ராணுவ வீரர்களும் பலியாகும் நிலை ஏற்பட்டது.

    கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்கா - தலிபான் இடையிலான பேச்சுவார்த்தையில், வன்முறையை குறைக்க தலிபான் அமைப்பு ஒத்துக் கொண்டதால், அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக்கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது.

    அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதே முடிவை தற்போதைய அதிபர் ஜோ பைடனும் எடுத்தார். இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து ராணுவ வீரர்களும் வெளியேறினார்கள். இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் பலம் குறைந்துள்ளது.

    அமெரிக்க படைகள் வெளியேறியதும் தலிபான்கள், ராணுவம் மீது தாக்குதல் நடத்தி ஒவ்வொரு மாகாணங்களாக கைப்பற்ற தொடங்கினர். தற்போது குந்தூஸ், சர்-இ போல் ஆகிய இரண்டு மாகாணங்களையும் கைப்பற்றிவிட்டோம் என தலிபான் தெரிவித்துள்ளது. அதேவேளையில் தலிபான் கைப்பற்றியதாக கூறும் செய்தியை அரசு மறுத்துள்ளது.
    Next Story
    ×