search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு - பாகிஸ்தானில் அதிரடி அறிவிப்பு

    பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 63 ஆயிரத்து 125 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 491 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 797 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர்.

    இந்நிலையில், அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, முகாம்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஓட்டல்கள், வணிக வளாகங்களில் நுழைய அனுமதி ரத்து என அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

    தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
    Next Story
    ×