search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குழந்தைகள் 6 நாளில் குணம் பெறலாம்

    நீண்ட காலம் தொற்றால் பாதிக்கப்படுகிற குழந்தைகள் சோர்வு அடைகிறார்கள். 84 சதவீத குழந்தைகள், நோயின் ஒரு கட்டத்தில் சோர்வுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    இந்தியாவில்  கொரோனா  தொற்றின் 3-வது அலையில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அவர்களுக்கான  தடுப்பூசி  இன்னும் வராததுதான் இதற்கு காரணம்.

    இந்த நிலையில் குழந்தைகளுக்கான கொரோனா பாதிப்பு தொடர்பாக ‘தி லான்செட் சைல்டு அண்ட் அடல்சன்ட்’ பத்திரிகையில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்தில் ‘ஸோ கோவிட் ஸ்டடி ஸ்மார்ட் போன் செயலி’மூலம், 5-17 வயது சிறுவர், சிறுமிகள் 25 ஆயிரம் பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் வருமாறு:-

    கொரோனா தடுப்பூசி


    * நீண்ட கால கொரோனா அறிகுறிகளை அனுபவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஒரு சில குழந்தைகள் மட்டுமே, நீண்ட கால பாதிப்புகளை அனுபவிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் பேராசிரியர் எம்மா டுங்கன் தெரிவித்துள்ளார்.

    * சில பெரியவர்கள் நீடித்த நோய் பாதிப்பை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு 4 வாரங்களோ அதற்கும் கூடுதலாகவே அறிகுறிகள் தொடரும்.

    * பொதுவாக குழந்தைகள் சராசரியாக 6 நாளில் கொரோனாவால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தனர். நோயின் முதல் வாரத்தில் சராசரியாக 3 அறிகுறிகள் அவர்களுக்கு இருந்தது. லேசான பாதிப்பையே அனுபவிக்கின்றனர். இவர்கள் 6 நாளில் குணம் அடைவார்கள்.

    * நீண்ட காலம் தொற்றால் பாதிக்கப்படுகிற குழந்தைகள் சோர்வு அடைகிறார்கள். 84 சதவீத குழந்தைகள், நோயின் ஒரு கட்டத்தில் சோர்வுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    * தலைவலி, வாசனை இழப்பு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள்.

    * கொரோனா வைரஸ் சோதனையில் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தபின்னர் கூட குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படலாம்.

    இவ்வாறு அதில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×