search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரிப்பு - உலக சுகாதார அமைப்பு

    அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    ஜெனீவா:

    உலக அளவில்  கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

    கொரோனா அதிகரிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளன. கொரோனா புதிய பாதிப்புகள் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 19 கோடியே 56 லட்சத்தை தாண்டி விட்டது.

    கோப்புபடம்

    இதேரீதியில் சென்றால், இன்னும் 2 வாரங்களில் 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    உலக அளவில் 19.5 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 41.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 6.1 லட்சம் பேரும், இந்தியாவில் 4.22 லட்சம் பேரும், பிரேசிலில் 5.52 லட்சம் பேரும் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.


    Next Story
    ×