என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்பெயின் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த எலி- அலறியடித்து ஓடிய உறுப்பினர்கள்
Byமாலை மலர்24 July 2021 9:44 AM GMT (Updated: 24 July 2021 2:50 PM GMT)
ஸ்பெயின் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது எலி குறுக்கும் நெடுக்குமாக ஓடியதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
மாட்ரிட் :
ஸ்பெயின் பாராளுமன்ற கூட்டம் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற போது ஒரு கலகல சம்பவம் நடந்துள்ளது.
பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் மேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க இருந்தனர். அப்போது பாராளுமன்றத்திற்குள் ஒரு எலி நுழைந்ததால் உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பின் அங்குள்ளவர்களின் கால்களுக்குள் அங்கும் இங்குமாக ஓடிய எலியால் எப்போதும் அமைதியாக விறுவிறுப்புடன் இயங்கும் பாராளுமன்ற கூட்டத்தை சிறிது நேரம் ஒத்திவைத்தனர்.
அதன்பின்னர் அவையில் ஒரு உறுப்பினர் பேசத் தொடங்கியதும், மீண்டும் எலி குறுக்கே ஓடியது. இதைக் கண்டதும் அந்த உறுப்பினர் முகக்கவசம் போட்டபடியே கூச்சலிட்டுக் கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் அங்குள்ள கேமராக்களில் பதிவாகி உள்ளன.
பின்னர் ஒரு வழியாக அவைத் துணைத் தலைவர் ஜுவான் மரின் எலியைப் பிடித்து அப்புறப்படுத்தினார். இதற்கு பிறகு மீண்டும் பாராளுமன்றம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

Next Story
×