search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அதிபா்  ஜேக்கப் ஜூமா
    X
    முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா

    தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுதலை

    தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் ஆதரவாளா்கள் நடத்திய வன்முறை போராட்டத்தில் பலா் உயிரிழந்து உள்ளனா்.
    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர் ஜேக்கப் ஜூமா.  இவர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

    ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக அதிபா் பதவி வகிக்கும் சிறில் ராமபோசா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஜேக்கப் ஜூமா கடந்த 2018-ம் ஆண்டு ராஜினாமா செய்துள்ளார்.

    ஜூமாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் அவா் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மாதம் 29-ம் தேதி 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து, கடந்த 7-ம் தேதி ஜூமா போலீசாரிடம் சரணடைந்துள்ளார். 

    இந்நிலையில், ஜூமாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவரது சகோதரா் மைக்கேல் ஜூமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கருணை அடிப்படையில் அவருக்கு இந்த ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
    Next Story
    ×