search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்கர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா

    செப்டம்பர் 7-ம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது என கனடா அரசு அறிவித்துள்ளது.
    ஒட்டாவா:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் கனடா வருவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கனடா, அமெரிக்காவுடனான எல்லையை திறக்க உள்ளது. 
    Next Story
    ×