search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலந்தி வி‌ஷத்தில் இருந்து மாரடைப்பு மருந்து
    X
    சிலந்தி வி‌ஷத்தில் இருந்து மாரடைப்பு மருந்து

    சிலந்தி வி‌ஷத்தில் இருந்து மாரடைப்பு மருந்து - ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பரிசோதனை

    குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் பிரேசர் தீவில் உள்ள ஒரு வகை சிலந்தியின் வி‌ஷத்தில் காணப்படும் ஒரு மூலக்கூறிலிருந்து மாரடைப்பை தடுக்கும் மாற்று மருந்தை உருவாக்கி உள்ளனர்.

    சிட்னி:

    சிலந்தி வி‌ஷத்தில் இருந்து மாரடைப்பை தடுக்கும் மாற்று மருந்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

    குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் பிரேசர் தீவில் உள்ள ஒரு வகை சிலந்தியின் வி‌ஷத்தில் காணப்படும் ஒரு மூலக்கூறிலிருந்து மருந்தை உருவாக்கி உள்ளனர்.

    இந்த வி‌ஷம் மாரடைப்பால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை தடுக்க முயல்கிறது என்றனர். இந்த ஆய்வுக்கு குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் நாதன் பால்பாண்ட், பேராசிரியர்கள் க்ளென் கிங், பீட்டர் மெக்டொனால்ட் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதயத்துக்கு ரத்த ஓட்டம் குறைவதால் இதய தசைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரணு சூழல் அமிலமாக மாறி இதய செல்கள் இறப்பதற்கு ஒரு தகவலை அனுப்புகிறது. மாரடைப்பு அழுத்தங்களுக்கு ஆளானாலும் இதய செல்கள் மீண்டும் செயல்பட வைக்கும் ஹை 1ஏ எனப்படும் ஒரு புரதத்தை சிலந்தி வி‌ஷத்தில் இருந்து விஞ்ஞானிகள் குழு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர்.

    கோப்புபடம்

    அந்த புரதம், இதயத்தில் உயிரணு இறப்புகளை குறைக்கிறது மற்றும் இதய உயிரணுக்களின் உயிர் வாழ்வை மேம்படுத்துகிறது என்றார்.

    பேராசிரியர் மெக்டொனால்ட் கூறும்போது, இது ஒவ்வொரு ஆண்டும் மாரடைப்பு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு உதவும் என்றார்.

    இதையும் படியுங்கள்...கியூபாவில் உணவு, மருந்துகள் மீதான சுங்க வரி ரத்து

    Next Story
    ×