search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெகுல் சோக்சி
    X
    மெகுல் சோக்சி

    மெகுல் சோக்சிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டொமினிகா நீதிமன்றம்

    மருத்துவ காரணங்களுக்காக மெகுல் சோக்சிக்கு டொமினிக்கன் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
    சான்டோ டொமிங்கோ:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டு மெகுல் சோக்சியும் அவரது உறவினர் நீரவ் மோடியும் 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். லண்டனுக்குச் தப்பிச் சென்ற நீரவ் மோடி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு கைது செய்யப்பட்டார்.

    மெகுல் சோக்சி ஆன்டிகுவா தீவுக்கு தப்பிச்சென்று அங்கு குடியுரிமைப் பெற்றார்.

    இதற்கிடையே, மெகுல் சோக்சி கடந்த மே 23-ம் தேதி ஆன்டிகுவா தீவிலிருந்து மாயமானார். அதன்பின், டொமினிக்கனில் அவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரைக் கைது செய்த காவல் துறை, சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் நுழைந்ததாக அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணை டொமினிக்கன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், மெகுல் சோக்சிக்கு டொமினிக்கன் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக ஆண்டிகுவா மற்றும் பார்படாஸ் நாட்டுக்குச் செல்ல  இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  இந்திய மதிப்பில் 2.75 லட்சம் பிணைத்தொகையாக செலுத்தவும், மருத்துவ சிகிச்சை முடிந்ததும் டொமினிக்கன் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
    Next Story
    ×