search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயை அணைக்க போராடும் வீரர்கள்
    X
    தீயை அணைக்க போராடும் வீரர்கள்

    லண்டனில் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து

    லண்டன் எலிபண்ட் அன்ட் காசல் ரெயில் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான நியுவிங்டன் என்ற இடத்தில் எலிபண்ட் அன்ட் காசல் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், எலிபண்ட் அன்ட் காசல் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் ரெயில்வே வளைவுகளுக்கு அருகிலுள்ள 3 வணிக வளாகங்கள், 6 கார்கள் மற்றும் தொலைபேசி பெட்டி ஆகியவை எரிந்து நாசமானது. 

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர். தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் அப்பகுதி முழுக்க கரும்புகை பரவியது.

    இதனால் அருகில் இருக்கும் வீடுகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூட வலியுறுத்தப்பட்டனர். தீ விபத்து குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன.

    உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு  தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என தீயணைப்பு வீரர்கள் கூறினர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
    Next Story
    ×