search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்லட் ரெயில்
    X
    புல்லட் ரெயில்

    திபெத்தில் புல்லட் ரெயில் சேவையை தொடங்கியது சீனா

    இந்தியா - சீனா இடையில் ஏற்கனவே எல்லை பிரச்சனை உள்ளதால், சீனாவின் புதிய புல்லட் ரெயில் திட்டம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
    பீஜிங்:

    சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் புல்லட் ரெயில் திட்டத்தை தொடங்கி உள்ளது. திபெத் தலைநகர் லாசாவையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் வகையில், 435.5 கிலோமீட்டர் தொலைவிலான புல்லட் ரெயில் வழித்தடத்தில் புல்லட் ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    சீனாவின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டம் ஜூலை 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    சீன அதிபர் ஜி ஜின்பிங்

    சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான சிசுவான் பகுதியுடன்  திபெத்தின் யிங்சி நகரை இணைக்கும் புதிய ரெயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தியிருந்தார். அத்துடன், எல்லை ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் புதிய ரெயில் பாதை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறினார்.

    புல்லட் ரெயில் இயக்கப்படும் யிங்சி நகரம், இந்தியாவின் அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டி உள்ள பகுதி ஆகும். சீனா தொடர்ந்து திபெத் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், எல்லைப்பகுதிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இந்தியா - சீனா இடையில் ஏற்கனவே எல்லை பிரச்சனை உள்ளதால், சீனாவின் இந்த புதிய புல்லட் ரெயில் திட்டம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

    சீனாவின் சிசுவான் பிராந்தியத்தின் தலைநகரான செங்குடு பகுதியில் இருந்து துவங்கும் இந்த ரெயில் திட்டம், யான் மற்றும் காம்டோ வழியாக திபெத் நாட்டிற்குள் நுழைந்து லாசா வரை செல்கிறது. இதன் மூலம் செங்குடு முதல் லாசா வரையிலான 48 மணிநேர பயணம் 13 மணி நேரமாகக் குறையும்.
    Next Story
    ×