search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா - 46 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

    இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தை நெருங்குகிறது.
    லண்டன்:

    உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதைத்தொடர்ந்து 3-வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது.

    கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் பட்டியலில் இங்கிலாந்து 7-வது இடத்தில் நீடிக்கிறது.
     

    இந்நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 46,00,623 ஆக அதிகரித்துள்ளது.

    அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தை நெருங்குகிறது என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×