search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்பூஷண் ஜாதவ்
    X
    குல்பூஷண் ஜாதவ்

    பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் வழக்கு ஒத்திவைப்பு

    மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் தரப்பில் ஆஜராகி வாதாடுவதற்கு ஒரு வக்கீலை நியமிப்பதற்கு இஸ்லாமாபதாத் ஐகோர்ட்டில் அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு (வயது 50), அந்த நாட்டின் ராணுவ கோர்ட்டு 2017-ல் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து இந்திய தரப்பில் திஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் முறையிடப்பட்டது. அந்த கோர்ட்டு, குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துமாறு கூறியது. இந்தியா தூதரக ரீதியில் ஜாதவை அணுகவும் அனுமதிக்குமாறு தீர்ப்பில் கூறப்பட்டது.

    இந்த வழக்கில் குல்பூஷண் ஜாதவ் தரப்பில் ஆஜராகி வாதாடுவதற்கு ஒரு வக்கீலை நியமிப்பதற்கு இஸ்லாமாபதாத் ஐகோர்ட்டில் அரசு தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாகிஸ்தான் அட்டார்னி ஜெனரல் காலித் குல்பூஷண் ஜாவத் கான் வேண்டுகோளைத் தொடர்ந்து விசாரணையை அக்டோபர் 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அதர் மினால்லா
    Next Story
    ×