search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வெள்ளம்
    X
    மழை வெள்ளம்

    நேபாளம், பூடானில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்

    நேபாளத்தின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
    திபெத்தில் பருவமழைக்காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேபாளம்- திபெத் எல்லையில் உள்ள சிந்துபால்சவுக் மாவட்டத்தில் மேலம்சி, இந்திராவதி ஆகிய இரண்டு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்ததில் கரையோர மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமானோரை காணவில்லை.

    வெள்ளம்

    மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மேலம்சி பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    மூன்று நாட்களாக பெய்த மழையால் வீடுகள், பாலங்கள், சாலைகள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

    வெள்ளம்

    அதேபோல் பூடானில் லயா என்ற பகுதியும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான கார்டிசெப்ஸ் என்ற பூஞ்சைகளை சேகரிக்க சென்ற மக்கள், இரவில் தூங்கும்போது வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதனால் பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. அவர்கள் மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×