search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோந்துப் பணியில் வீரர்கள்
    X
    ரோந்துப் பணியில் வீரர்கள்

    கொலம்பியா ராணுவ தளத்தில் கார் குண்டு தாக்குதல் -36 வீரர்கள் படுகாயம்

    கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படையின் கிளர்ச்சியாளர்களுடன் 2016 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    பொகோட்டா:

    கொலம்பியாவின் ககூட்டா நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. வெனிசுலா எல்லையை ஒட்டி உள்ள இந்த தளத்தை குறிவைத்து கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 36 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை இடதுசாரி கிளர்ச்சிக் குழுவினர் நடத்தியிருக்கலாம் என குற்றம்சாட்டப்படுகிறது.

    கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படையின் கிளர்ச்சியாளர்களுடன் 2016 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், தேசிய விடுதலை ராணுவத்தின் கொரில்லா படையினர், வன்முறைக் கும்பல்கள் மற்றும் ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள  புரட்சிகர ஆயுதப்படையினர் ராணுவத்துடன் தொடர்ந்து மோதலில் ஈடுபடுகின்றனர். 

    பாதிக்கப்பட்ட  ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை சந்தித்து விசாரிப்பதற்காக ககூட்டா செல்ல உள்ளதாக அதிபர் இவான் டியூக் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×