search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் பாதுகாப்பு (கோப்பு படம்)
    X
    போலீஸ் பாதுகாப்பு (கோப்பு படம்)

    போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு எதிர்ப்பு... பாதுகாப்புக்கு சென்ற 2 போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நபர்

    பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து போட வரும் மருத்துவ ஊழியர்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்துகின்றனர்.
    லாகூர்:

    பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருத்து முகாம்களை நடத்த அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புகள் உள்ளன. போலியோ என்பது மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை எனவும், அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லெடன் அமெரிக்கப்படைகளால் கொல்லப்படுவதற்கு பின்லேடன் தொடர்பான தகவல்களை சேகரிக்க அவன் தங்கி இருந்த பகுதிகளில் பொய்யாக போலியோ தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றதாகவும் பாகிஸ்தானில் உள்ள அடிப்படைவாதிகள் கருதிகின்றனர். 

    இதனால், போலியோ முகாம்கள் நடக்கவிடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், போலியோ சொட்டு மருந்து போட வரும் மருத்துவ ஊழியர்கள் மீதும் சில அமைப்பினர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், போலியோ முகாம்கள் நடத்தப்படும்போது மருத்துவ ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள மர்டன் மாவட்டத்தில் நேற்று போலியோ சொட்டுமருத்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சொட்டுமருந்து முகாம் முடிவடைந்தபின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தங்கள் பணியை முடித்துவிட்டு போலீஸ் நிலையத்திற்கு செல்ல முற்பட்டனர்.

    அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர் போலீசார் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதில், பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த 2 போலீசாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
    Next Story
    ×