search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இந்தியா தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி

    இந்தியா தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிகளை பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அன்விசா அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

    ரியோடி ஜெனிரோ:

    கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது.

    கோவேக்சின் என்ற அந்த தடுப்பூசி இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கோவேக்சின் தடுப்பூசியை பிரேசில் நாட்டில் இறக்குமதி செய்ய அனுமதி கேட்கப்பட்டது.

    ஆனால் ஆய்வு விவரங்கள் உள்ளிட்ட சில காரணங்களை கூறி பிரேசில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய சுகாதார ஒழுங்குமுறை அமைப்பான அன்விசா நிராகரித்து இருந்தது.

    இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசிகளை பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அன்விசா அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

    பல்வேறு சோதனை முடிவுகளை சமர்ப்பித்த பின்னர் தற்போது பிரேசில் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதேபோல் ரசியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் பிரேசில் அனுமதி வழங்கி உள்ளது.

    இது குறித்து பிரேசில் சுகாதார நிறுவன மையம் கூறும்போது, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 4 லட்சம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளது என்றார். பிரேசில் மக்கள் தொகையில் இதுவரை 21 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×