search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் கொடி
    X
    பாகிஸ்தான் கொடி

    பாதுகாப்பு படை-பயங்கரவாதிகள் மோதல்: பாகிஸ்தானில் 8 பேர் பலி

    பலுசிஸ்தானில் உள்ள துர்பத் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை தடுக்கும் வகையில் சாலையில் வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. அங்குள்ள கொயோட்டா அருகே பாதுகாப்பு படையினர் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.

    அங்கிருந்து படை வீரர்கள் வேறு இடத்திற்கு செல்வதற்காக வாகனங்களில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த பயங்கரவாதி வீரர்கள் மீது சரமாரியாக சுட்டார்கள். உடனே பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

    இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டார்கள். இந்த தாக்குதலில் மேலும் 6 வீரர்கள் மற்றும் 8 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

    இதேபோல பலுசிஸ்தானில் உள்ள துர்பத் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை தடுக்கும் வகையில் சாலையில் வெடிகுண்டு பதுக்கி வைத்து இருந்தனர்.

    வாகனம் செல்லும்போது குண்டு வெடித்தது. இதில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    பாகிஸ்தானில் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த அமைப்புகளில் ஏதாவது ஒன்று தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×