search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா - நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

    சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
    பெய்ஜிங்:

    கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்ட நாடான சீனா,  தொற்று பரவலை மிகசிறப்பாக கையாண்டு பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தியுள்ளது. 2019- டிசம்பரில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கூட எட்டவில்லை. அந்த அளவுக்கு விழிப்புடன் பணியாற்றி தொற்று பரவலை சீனா கட்டுக்குள் வைத்துள்ளது.

    இந்த நிலையில், சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக  கொரோனா பாதித்த பகுதிகளில் மினி கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள சீனா, நோய்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் இருந்து வெளியே செல்ல பயணக்கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது
    Next Story
    ×