search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தூதரகம்
    X
    இந்திய தூதரகம்

    இந்திய தூதரக அதிகாரிகளை தனிமைப்படுத்த சொன்ன பாகிஸ்தான்

    பாகிஸ்தானில் இதுவரை 9.03 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    இந்திய தூதரக அதிகாரிகள் 12 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சனிக்கிமையன்று (மே 22), இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் வந்து சேர்ந்தனர். புறப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு அதிகாரியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டது. 

    இதையடுத்து பாகிஸ்தானுக்கு வந்த 12 அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் டிரைவர்கள் என அனைவரும் தன்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா பரிசோதனை

    இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தூதரக அதிகாரிகளில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு பதிலாக தனிமைப்படுத்தப்பட வேண்டும், என்று தூதரக வட்டார தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானில் இதுவரை 9.03 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 20308 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×