search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான்
    X
    ஈரான்

    அணுசக்தி மையங்களின் புகைப்படங்களை பெற சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி இல்லை - ஈரான்

    அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
    டெஹ்ரான்:

    அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி வந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

    அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன் ஒரு பகுதியாக ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகமையை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் ஈரானின் அணுசக்தி மையங்களில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஈரான் ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இனி ஈரானின் அணுசக்தி மையங்களின் புகைப்படங்களை பெற முடியாது என ஈரான் அரசு அறிவித்துள்ளது.

    இது குறித்து ஈரான் நாடாளுமன்றத்தின் செய்தி தொடர்பாளர் முகமது பாகர் கலிபாப் கூறுகையில் ‘‘அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை புறக்கணிப்பதன் ஒரு பகுதியாக சர்வதேச அணுசக்தி முகமைக்கு இனி ஈரானின் அணுசக்தி மையங்களின் புகைப்படங்களை அணுக உரிமை இல்லை என அறிவிக்கப்படுகிறது’’ என்றார்.

    முன்னதாக அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனையின் கீழ் சர்வதேச அணுசக்தி முகமை தனது அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தினமும் ஈரானின் அணுசக்தி மையங்களில் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்து பகுப்பாய்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×