search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்
    X
    மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்

    ரஷ்யாவில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா பாதிப்பு

    ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.11 லட்சத்தைக் கடந்துள்ளது.
    மாஸ்கோ:

    உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
     
    இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 32 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
     
    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.
     
    இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,31,744 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 311 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.

    அங்கு கொரோனா தொற்றில் இருந்து 44.50 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.70 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×