search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளை மாளிகை
    X
    வெள்ளை மாளிகை

    இந்தியாவில் இருந்து அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும்- அரசு அறிவுரை

    இந்தியாவை விட்டு நாடு திரும்ப விரும்பும் அமெரிக்க குடிமக்கள் இப்போது கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியதாவது:-

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக அனைத்து வகையான மருத்துவ சேவைகளை அணுகுவது கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்தியாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் எவ்வளவு சீக்கிரம் வெளியேறுகிறீர்களோ அவ்வளவு பாதுகாப்பானது.

    இந்தியாவை விட்டு நாடு திரும்ப விரும்பும் அமெரிக்க குடிமக்கள் இப்போது கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு தினசரி நேரடி விமானங்களும், பாரீஸ் மற்றும் பிராங்பர்ட் வழியாக விமானங்களும் கிடைக்கின்றன என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×